சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­கா­ர­மா­னது அர­சியல் தீர்வு செயற்­பாட்டை குழப்பும் -டிலான் பெரேரா

0
83

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி­ வ­ழங்கும் செயற்­பாட்டில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­கு­மாறு கோரு­வ­தா­னது தமிழ்பேசும் மக்­க­ளுக்­கான அர­சி யல் தீர்வு செயற்­பாட்டில் சிக்­கலை  ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விடும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

இலங்­கையின் நீதி­ப­திகள் சர்­வ­தேச நாடு­களில் மிகவும் பிர­ப­ல­மா­ன­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். எனவே இவ்­வா­றான இலங்கை நீதி­ப­தி­களைக் கொண்டு விசா­ரணை செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதே பொருத்­த­மா­ன­தாக இருக்கும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பாக மக்­களின் ஆலோ­ச­னை­களை பெற்­றுக்­கொண்ட நல்­லி­ணக்கப் பொறி­முறை குறித்த செய­ல­ணி­யா­னது விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்­டு­மென பரிந்­துரை செய்­துள்­ளமை குறித்து வின­வி­ய­போதே சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்:-

கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து பொது­செ­ய­லா­ள­ராக இருக்­கின்ற நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான செய­ல­ணி­யா­னது பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி­வ­ழங்கும் செயற்­பாட்டில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­க­வேண்­டு­மென பரிந்­துரை செய்­துள்­ளது.

இந்தப் பரிந்­து­ரை­யா­னது எம்மைப் பொறுத்­த­வ­ரையில் பாரிய சிக்­கல்­களை ஏற்­ப­டுத்தும் வித­மா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. இவ்­வாறு உள்­ளக செயற்­பாட்டில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்ப்­ப­தா­னது தென்­னி­லங்­கையின் இன­வா­தி­க­ளுக்கு பாரிய தீணி­போ­டு­வ­தாக அமைந்­து­விடும். அதா­வது தென்­னி­லங்­கையில் இன­வா­தத்தை கக்­கி­கொண்­டி­ருக்கும் கடும்­போக்­கு­வா­தி­க­ளுக்கு இந்த சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­கா­ர­மா­னது தீணி­போ­டு­வ­தா­கவே அமையும்.

அத­னைக்­கொண்டு அவர்கள் இன­வா­தத்தை பரப்­பு­வார்கள். அதற்கு நாம் இட­ம­ளிக்க முடி­யாது. அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது சர்­வ­தேச நீதி­ப­திகள் பரிந்­து­ரை­யா­னது வீண் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும் ஒரு விவ­கா­ர­மா­கவே இருக்­கப்­போ­கி­றது. விசே­ட­மாக தற்­போது கூட எமது நாட்டில் சிறு­பான்­மை­யி­னத்தை சேர்ந்த ஒரு­வரே பிர­தம நீதி­ய­ர­ச­ராக இருக்­கின்றார்.

அவர் தொடர்பில் யாருக்கும் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. தற்­போது நீதித்­துறை சுயா­தீ­ன­மா­கவே இருக்­கி­றது. எனவே சர்­வ­தேச நீதி­ப­திகள் இன்றி நீதி­வ­ழங்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்க முடியும். இது தொடர்பில் அனைத்துத் தரப்­பி­னரும் சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு அத­னூ­டாக தமிழ் பேசும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை வழங்கும் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வh­றான ஒரு சாத­க­மான சூழ்­நி­லையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் பற்­றிய விவ­கா­ரத்தை பேசிக்கொண்டிருந்தால் அது நிச்சயம் அரசியல் தீர்வு விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்தும். அதற்கு இடமளிப்பதா? இல்லை நீண்டகாலமாக காத்திருக்கும் அரசியல் தீர்வை சிக்கலின்றி பெற்றுக் கொள்வதா என்பது குறித்து நாம் சிந்திக்கவேண்டும். எனவே தற்போதைய நிலைமையில் சர்வதேச நீதிபதிகள் என்பது பொருத்தமற்ற ஒரு பரிந்துரையாகவே காணப்படுகின்றது. அத்துடன் அது சாத்தியமற்றதுமாகும்.

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்