முதல்வர் வரவு – முகவரிகளை தொலைப்பதற்கும் அல்ல..!! முக மூடிகளை அணிவதற்கும் அல்ல..!!

0
216

மாண்புமிகு கௌரவ வடமாகாண முதல்வரது கனடா வருகையை ஆவலோடு எதிர்பார்த்த பல்லாயிரம் தமிழர்களுள் நானும் ஒருவன் என்றவகையில்.. எமது முதல்வர் வட மாகாணசபையை பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை அவர் நமது இன நலனுக்காக என்னவெல்லாம் எப்படியெல்லாம் செய்யலாமோ அத்தனையும் காலமறிந்து தேவைகள் அறிந்து செய்துவருகிறார்..

இதன் ஒரு அங்கமாக கனேடியதமிழர்களை சந்தித்து வருகிறார். அவரது சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற மேலுமொரு வேண்டப்படாத சம்பவத்தை எனது நண்பர்களோடு வாசகர்களோடு பகிர்ந்து – எனது மனச் சுமையை இறக்கி ஆறுதலடைய விரும்புகிறேன்..

நிகழ்வின் ஒரு கட்டத்தில் முதல்வரை பார்க்க மக்கள் முண்டியடிக்கின்றனர் பாதுகாப்பு என்கிற அதீத கெடுபிடி தளர்த்தப்படுகிறது.. கைலாகு கொடுப்போர் கொடுக்க செல்பி எடுப்போர் எடுக்க ஆனந்த மிகுதியில் முதல்வர் முகம் மலர்ந்திருந்தது கண்டு நானும் மகிழ்ந்தேன்..

ஆர்வமிகுதியால் முதல்வரை மக்கள் சூழ்ந்துகொள்ள அந்த சம்பவம் நடைபெறுகிறது..

வயதான ஒரு மனிதர் தள்ளாத வயதிலும் முதல்வரை நெருங்க முதல்வரும் அவரை காண பெயரைக்கூறி முதல்வர் அவரை அருகில் அழைக்கிறார் .. வளமை போல அந்த வயதானவர் அவருக்கேயான பாணியில் பல பக்க பேப்பர் களையும் ஒரு புத்தகத்தையும் முதல்வரிடம் கொடுத்து ஏதேதோ போர்க்குற்றம் நில அபகரிப்பு என தனது கருத்துக்களை பகிர்கிறார் முதல்வரது கையும் அந்த வயதானவர் கையும் ஒன்றை ஒன்று கௌவிய படி இருக்க..

## ஐயோ .. இது.. இதுக்குள்ள.. இதோடை… வந்துட்டுது ##
என கூறியபடி அந்த முதியவரை முதல்வர் கரங்களில் இருந்து பிரித்து அப்புறப்படுத்திக்கிறார் அந்த நபர் அவர் பெயரை நான் சொல்லவரவில்லை .. இது என்பதன் அர்த்தம் என்ன ?? இதோட என்பதன் அர்த்தம் என்ன ??

அந்தவயதானவர் கழுத்தில் போட்டிருந்தது மஞ்சல் சிகப்பு சால்வை அதில் ஒரு தமிழீழ படம் மட்டும் இருக்கும் தமிழ் ஈழம் எனவும் ஆங்கிலத்திலும் தமிழில் எழுதியும் இருக்கும்.. முதல்வருக்கு முன்னால் இதோட அவர் நிற்க்காக் கூடாதாம்.. முதல்வர் சொன்னாரா அப்படி இல்லவே இல்லை.. முதல்வர் வருகைக்கான குழுவில் உள்ள ஒருவரே சொன்னார்.. அப்புற்ப்படுத்தும் செயலிலும் இறங்கினார். எதற்க்காக நாம் எமது தனிமனித சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கவேண்டும்?? அல்லது முகமூடிகளை அணியவேண்டும்..??

ஒவ்வொரு மேசையாக முதல்வர் மக்களை சந்தித்து நடந்து சென்றார் மற்றுமொரு மேசையில் இருந்த 7 பேரில் 2 பேர் அதே சால்வையை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர்.. (தேசியம்சார் நிகழ்வுகளில் எப்போதும் இவர்களை நான் இதே சால்வையோடு காண்பது வளமை) அவர்களது சால்வைகளும் அண்ணே உதை கீழே போடுங்கோ முதல்வர் வருகிறார் எனக்கூறி அகற்றப்பட்ட்து.. கண்டேன் வியந்தேன் – எந்தவகையில் இது நியாயம்..??
———————————————————
அந்தவயதானவர் எங்கு சென்றாலும் …##

எவரைச்சந்தித்தலும் எந்தமேடைகளில் ஏறினாலும் அந்தச் சால்வயை விட்ட தில்லை .. சால்வயில்லாமல் நாம் அவரை கண்டதுமில்லை.. எமக்கு கிடைத்துள்ள ஒரு முதல்வர் அவர் முதல்வராகவே இன்றுவரை இருக்கிறார்.. அவரே எழுகத்தமிழையும் செய்தார்.. ஏகப்பட்ட நன்மைகளையும் செய்துவருகிறார்.. செய்வார் எனவும் நம்பிக்கை வைத்துள்ளோம்.

நேற்று வரையான கனடிய தமிழர்களது பொது நிகழ்வுகளில் – நினைவு நிகழ்வுகளில் – தேசிய நிகழ்வுகளில் கனடிய அதிகாரிகள் எம் பிக்கள் மினிஸ்ட்டர்கள் வருகிறார்கள் எங்கட இந்த தேசியக்கொடிகளை சற்று நேரம் மறையுங்கோ கீழ பதியுங்கோ தம்பியவை என பலர் கென்சியும் விட்டுக்கொடுக்காத எங்கட தம்பியவை. அறிவுக்கொழுந்துகள் .. முதல்வருக்கு முன்னால் சாதாரண சால்வைகளுக்கு தடை போடல் – சற்று அதிகபட்ச எடுப்பாகவோ எழுந்தமானமாகவோ அடக்குமுறையாகவோ தெரிகிறது..

எமது அடையாளங்களை நாம் தொலைக்கக் கூடாது என கூறி நெற்றியிலே சிகப்பு திலகமிட்டு வீர நடை போட்டு வரும் எமது மாண்புமிகு முயதலமைச்சர் அவர்களுக்கு முன்னால் – நாம் எதற்கு எமது அடையாளங்களை விட்டுக்கொடுக்கவேண்டும்?? அல்லது முகமூடிகளை அணிந்துகொள்ளவேண்டும்.

முதல்வரது உரையை மீண்டும் மீண்டும் கேட்டிருந்தேன்.. அவர் அவராகவே உள்ளார் . அவரை கொண்டுவந்த நாங்கள்தான்.. எங்கேபோகிறோம் என தெரியவில்லை..

இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக – தமிழர்களது எம்பிக்களாக உள்ள கூட்ட்டமைப்பின் பல பிரதானிகள் துயிலுமில்லங்களில் ஓடிச்சென்று பிரதான தீபம் ஏற்றமுடியுமாயின் – எமது முதல்வருக்கு முன்னால் ஒரு சால்வயை அணிந்து நிற்க தடை போடுவது காலத்தின் கொடுமை..

கடந்த 2016 மாவீரர் தினத்தில் பத்து டாலர் கொடுத்து நானும் ஒரு தேசிய சால்வயை வாங்கிவந்தேன்..
கையில் எடுத்து பார்த்தபோது – சிலதுளி கண்ணீர் சிந்தல்கள் – அந்தச் சால்வாயினாலேயே அதையும் துடைத்தேன்..

நாம் எங்கே செல்கிறோம் ?

நன்றி – Mahenthiran Saravanamuththu

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்