கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்: உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி

0
34

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கொழும்பில் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கொழும்பில் நடத்தப்படுகின்றமை ஏமாற்றமளிப்பதாக அவர்கள் கூறினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

வடமாகாண சபையின் மொத்த உறுப்பினர்களில் 30 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.

அத்தோடு, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

கிழக்கு மாகாண சபையிலும் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

 

http://newsfirst.lk/tamil/
SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்