கொலைக் கருவியான ஒப்பந்தம்!

0
37

இந்திய தூதரகத்தில் அரசியல் பிரிவுகளை அன்றைக்கு கவனித்துக் கொண்டிருந்த முதல் செயலர் ஹர்தீப் பூரியிடம், பிரபாகரனை சந்தித்து என்ன பேசவேண்டும், எதை மறைக்க வேண்டும் என்ற பொறுப்பினை கொடுத்தார் தீட்சித். இதனையடுத்து ஜூலை 19-ந் தேதி யாழ் சென்று பிரபாகரனை சந்தித்த பூரி, ஒப்பந்தம் பற்றிப் பேசா மல், “வடகிழக்குப் பிர தேசங்களை இணைக்கவும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் ஜெய வர்த்தனே ஒப்புக்கொண்டி ருக்கிறார். டெல்லி எடுத்த முயற்சியால் இது நடந்திருக்கிறது. அதற்காக, இந்திய பிரதமரை சந்திக்க நீங்கள் டெல்லி வரவேண்டும்’’என்றார். அதற்கு பிரபாகரனோ, “”தமிழர் பகுதியிலிருந்து ராணுவ வெளியேற்றம், தமிழர்கள் மீள்குடியேற்றம் இவைகளுக்கு இலங்கை சம்மதிக்கும் பட்சத்தில், பேச்சுவார்த்தை நடத்து வதற்கு நாங்கள் தயார்” என்றார். டெல்லிக்குத் தகவல் தெரிவிக்கப்பட,

“ஒப்பந்தத்தில் இதனை சேர்த்துக்கொள்ளலாம்’ எனச் சொன்னார் ராஜீவ். இதனையடுத்து பிரபாகரனுடனான இரண்டாவது சந்திப்பில் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி குப்தாவும் பூரியுடன் சென்றி ருந்தார்.  ஒப்பந்தம் பற்றி போகிற போக்கில் பிரபாகரனிடம் தெரிவிக்கப் பட்டது. ஈழத்தமிழர்களும் புலிகள் இயக்கமும் நம்பிக்கை வைத்திருந்த ஒரே இந்திய அதிகாரி பூரி மட்டுமே. அந்த நம்பிக்கையில் டெல்லி வர சம்மதித்தார் பிரபாகரன். எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டுத்தான் டெல்லி செல்ல வேண்டுமென்பது பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. அதனால், பிரபாகரன் விருப்பப்படி சென்னை சென்று அங்கிருந்து டெல்லி செல்ல சம்மதித்தனர் இந்திய அதிகாரிகள்.

அதேசமயம், “இலங்கையின் பலாலி ராணுவத்தளம் ஊடாக நாங்கள் வரத்தயாரில்லை. நாங்கள் சொல்கிற இடத்துக்குத்தான் இந்திய ஹெலிகாப்டர்கள் வர வேண்டும்’ என பிரபாகரன் நிபந்தனை விதிக்க,  அதன்படி, சுதுமலை அம்மன்கோயில் அருகே இருந்த பள்ளிவளாகத்தில் தரையிறங்கின. ஜூலை 23-ந்தேதி, ஒரு ஹெலிகாப்டரில் பிரபாகரன், புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் யோகி, திலீபன், பிரபாகரனின் மனைவி, குழந்தைகள் ஏறினர். மற்றொரு ஹெலிகாப்டரில் இந்திய அதிகாரிகள்.

ஹெலிகாப்டர்கள் சென்னை செல்லாமல் திருச்சியில் இறங்கின.  பிறகு விமானம் மூலம் சென்னை வந்து எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித் தார். எம்.ஜி.ஆரோ, “”ஒப்பந்தத்தின் முழு வடிவத்தையும் நான் பார்க்க வில்லை. அதனால், ஒப்பந்தத்தை முழுமையாக ஆராய்ந்துவிட்டு கையெ ழுத்திடுங்கள்”’என எச்சரிக்கை செய்யும் விதத்தில் சொல்லியிருந்தார்.

அதனை மனதில் நிறுத்திக்கொண்ட பிரபாகரன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை சென்னையிலேயே தங்க வைத்துவிட்டு மற்றவர் களுடன் டெல்லிக்குச் சென்றார். ஹோட்டல் அசோகாவில் அறை எண் 518-ல் பிரபாகரனையும் ஆண்டன், திலீபன் மற்றும் யோகியையும் தங்க வைத்தனர் இந்திய அதிகாரிகள். இதற்கிடையே, ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்கள் சிலரை வேறு ஒரு ஹோட்டலில் தங்கவைக் கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து, ஏதோ நடக்கப்போகிறது என்பதை யூகிக்கத் துவங்கிவிட்டார் பிரபா கரன். ஹோட்டலில் தீட்சித் சந்தித்தபோது, அவரிடம் பிரபா கரன், “”நாங்களும் ஏற்கும் வகையில் ஒப்பந்தம் இருக்கவேண்டும். இல்லையேல் தனி ஈழம்தான் தீர்வு” எனச் சொல்ல, அதை அழுத்தமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தெரிவித்தார் பாலசிங்கம்.

ஜூலை 23-ந்தேதி, தீட்சித் துடன் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) இயக்குநர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணைச்செயலர் குல்தீப்சகாதேவ், ஹர்தீப் பூரி ஆகியோர் பிரபாகரனை சந்தித்து, ஒப்பந்தத்தின் சாராம்சங்களை மட்டும் டைப் செய்யப்பட்டிருந்த ட்ராப்டை காட்டி  கையெழுத்து போட வலியுறுத்தினர். ஆனால், “ஒப் பந்தத்தை முழுமையாக படிக்காமல் கையெழுத்து போடமாட்டேன்’ என பிரபாகரன் மறுக்க, “”டெல்லிவரை வந்துவிட்ட நீங்கள் போடமாட் டேன் என சொல்ல முடியாது” என மிரட்டும் தொனியில் அதிகாரிகள் பேச… “”இந்த ஒப்பந்தம் உங்களுக்கும் இலங்கைக்குமானது. இதனை ஏற்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது”’என்று பிரபாகரன் சொன்னதும் அதிர்ச்சியடைகிறார் தீட்சித். இரு நாடுகளுக்கிடையே யான ஒப்பந்தம், புலிகளை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை அப்போதுதான் முதன் முதலாக  உணரத் துவங்கினர் இந்திய உயரதிகாரிகள்.

“”இப்படி அடம் பிடிப்பது பிரதமருக்கு (ராஜீவ்) பிடிக்காது” என்று தீக்சித் கோபமாகப் பேச, “”எங்களை மிரட்டினால், நாங்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிடும்” என்று அழுத்தமாக தெரிவித்திருக் கிறார் பிரபாகரன்.  அதுபோல் ஆண்டன் பாலசிங்கமும் தனி ஈழம்தான் தீர்வு என்பதை வலியுறுத்த, செய்வதறியாமல் திகைத்துப்போனார் பூரி.

இந்த நிலையில், பிர பாகரனின் பிடிவாதத்தை ராஜீவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். புலிகளை வழிக்குக் கொண்டுவர என்ன செய்யலாம் என யோசித்தபோது, “”பிரதம ருடனான சந்திப்புக்கு நாங்கள் ஏற்பாடு செய் கிறோம்” என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட, “”பிரதமரை சந்திக்கும் முன்பு எம்.ஜி.ஆரை சந்திக்க விரும்புகிறோம்” என்கிறார் பிரபாகரன். ஜூலை 26-ல் டெல்லிக்கு வரவழைக்கப்படுகிறார் எம்.ஜி.ஆர்.! அவருடன் பண்ருட்டி ராமச்சந்திர னும் வந்திருக்க, பிரபா கரனை சந்திக்க வைப்ப தற்கு முன்பாக, தீட்சித், ஹர்தீப் பூரி, எம்.கே.நாரா யணன், பிரதமர் அலு வலக இணைச்செயலர் ரோனேன்சென் உள் ளிட்ட அதிகாரிகள் எம்.ஜி.ஆரை சந்தித்து, “”பிரபாகரன் கையெழுத் திட நீங்கள்தான் அவ ருக்கு அட்வைஸ் செய்ய வேண்டும்” என்றார்கள்.

தமிழ்நாடு இல்லத் தில் எம்.ஜி.ஆர்- பிரபா கரன் சந்திப்பு நடக்கிறது. அதில், “”ஒப்பந்தம் எங்க ளுக்குத் திருப்தியைத் தரவில்லை. எங்களை யாழ்ப்பாணத்துக்கு திருப்பி அனுப்பச் சொல் லுங்கள். அங்கு விவா தித்துவிட்டு முடிவை சொல்கிறோம்”’என்கிறார் பிரபாகரன். அவர்களை அமைதிப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.! இதனையடுத்து அசோகா ஹோட்டலுக்கு பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரை அழைத்துவந்த அதி காரிகள், கையெழுத்துப்போட நிர்பந்திக்கின்றனர். கடுமையாக மறுக்கிறார் பிரபாகரன். சிறை வைக்கப்பட்ட சூழல் உருவாகிறது. இதனால், எம்.ஜி.ஆரிடமும் டெல்லி கடுமை காட்டியது.

“”பிரபாகரனை காப்பாற்றியாக வேண்டும். முதலில் அவர்கள் டெல்லியிலிருந்து யாழ்ப்பாணம் போக வேண்டும்” என யோசித்த எம்.ஜி.ஆர்., ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளுமாறு பிரபாகரனுக்கு தகவல் கொடுத்துவிட்டு, ராஜீவை சந்திக்க, பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பி வைக்கிறார். நள்ளிரவில் பிரபாகரனை ராஜீவ்காந்தியிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கு வாய்மொழியாக சில உத்தரவாதங்களை புலிகளுக்குத் தருகிறார் ராஜீவ்காந்தி. அதனை ஏற்றும் ஏற்காத மனநிலையி லேயே ஒப்பந்தத்திற்கு தலையசைத்துவிட்டு வருகின்றனர் புலிகள்.

ஜூலை 29. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத் தாகிறது. இதுபற்றி இலங்கை பிரதமர் பிரேமதாசாவுக்கு தெரியப்படுத்தவே இல்லை. பிரேமதாசா வெளிநாடு செல்ல விருக்கும் நாட்கள் அறிந்தே ஒப்பந்தம் கையெழுத் தாகும் தேதியை முடிவு செய்திருந்தார் ஜெயவர்த்தனே. ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்தும் டெல்லி யிலிருந்து பிரபாகரன் விடுவிக்கப்படவில்லை.

ஒப்பந்தம் கையெழுத்தான 24 மணிநேரத்தில் இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்திற்கு வருகிறது. அமைதிப்படை யாழ்ப்பாணம் வந்தடைந் ததும் அடுத்த 3 நாட்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் வலியுறுத்துகிறது அமைதிப் படை! ஈழத்தில் களத்தில் நின்றிருந்த மாத்தையா, “”எமது இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இங்கு வந்தால் மட்டுமே ஆயுதங்களை ஒப்படைப்போம்” எனச் சொல்லி மறுக்கிறார். இந்த தகவல் டெல்லிக்கு செல்கிறது.

ஆகஸ்ட் 3-ந் தேதி டெல்லி அசோகா ஓட்டலிலிருந்து விடுவிக்கப்பட்டு, யாழ் திரும்பும் பிரபாகரன், மறுநாள் (4-ந் தேதி) முதன்முதலாக மக்கள் முன் பொதுமேடையில் தோன்றுகிறார். அப்போது அவர், “”நமக்கு மேலான சக்தி நமது பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறது. அதற்கு நாம் கட்டுப்படுகிறோம். நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில்”’’ என பிரகடனம் செய்கிறார் பிரபாகரன். இதனையடுத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி ஆயுதங்களை ஒப்படைக்கும் பணிகளை புலிகள் மேற்கொள்கின்றனர். ஆனால், மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை கொடுக்கும் ரகசிய வேலைகளை செய்கின்றனர் இந்திய அதிகாரிகள். இதனை புகைப்பட ஆதாரங்களுடன் இந்திய ராணுவ ஜெனரலிடம் புகாராக பதிவு செய்கிறார் பிரபாகரன். நடவடிக்கை இல்லாததால், தமது இயக்கத்தின் ஆயுத ஒப்படைப்பை நிறுத்தச்சொல்லி கட்டளையிடுகிறார் பிரபாகரன்.

புலிகளுக்கும் அமைதிப்படைக்கும் மோதல் வெடித்தது. இருதரப்பிலும் உயிரிழப்புகள்.      வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் தமிழக ஆளுங்கட்சி யான தி.மு.க. உள் ளிட்ட கட்சிகளின் வலியுறுத்த லால் இலங்கையி லிருந்து இந்தியா திரும்பியது அமை திப்படை! ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் காரண மாக எத்தனையோ மோசமான சம்ப வங்கள்  நடந்து முடிந்துவிட்டன. வட-கிழக்கு மாநிலங்களின் இணைப்பையே ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு நீதிமன்றமே அறிவித்தது. இன்றளவும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தே வருகிறது இலங்கை.

“”ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கும் அரசியல் சாசனத்தின் 13-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டதை தவிர, வேறெதுவும் நடக்கவில்லை. புலிகளைப் பற்றிய இந்தியாவின் கணிப்பு தவறாகப் போனதும் ஒப்பந்தம் செயலிழக்க முக்கிய காரணம்” என்கிறார் கேணல் ஹரிஹரன்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசவைக் கவிஞராக இருந்த புலவர் புலமைப்பித்தன், “”திரிகோண மலையை மனதிலே வைத்து இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்காக மட்டுமே செய்து கொண்ட ராஜீவின் ஒப்பந்தம் ஒருவகையில் ஈழத்தமிழர் களுக்கு எதிரான கொலைக்கருவி தான்” என்கிறார்.

-இரா.இளையசெல்வன்

lakkiyam.nakkheeran.in

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்