ஃப்ரைடு கார்ன்

0
36

என்னென்ன தேவை?

உதிர்த்த சோளம் – 100 கிராம்,
எண்ணெய், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் – தேவைக்கு,
காய்ந்தமிளகாய் விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு, மைதா – தலா 25 கிராம்,
நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், பூண்டு, இஞ்சி – தலா 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 1,
சோயா சாஸ் – தேவைக்கு.

எப்படிச் செய்வது? 

பாத்திரத்தில் சோளம், மைதா, சோள மாவு, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், காய்ந்தமிளகாய் விழுது சேர்த்து கலந்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயை வதக்கி, பொரித்த சோளம், ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்

http://www.kungumam.co.in

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்