சமூக வலைத்தளங்களில் விக்னேஸ்வரனுக்கு வலுக்கும் ஆதரவு

0
48

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ள நிலையில், பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்கான ஆதரவு வலுப்பெற்றுள்ளது.

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கை அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதிப்பதற்கு நேற்றைய தினம் வடக்கு மாகாண சபை கூடியிருந்தது.

இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சர், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்களை தாமாகவே பதவி விலக வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரும் நோக்கில் ஆளுநரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை முன்பாக ஒன்று கூட சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, இன்று மாலை 3 மணிக்கு ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் முதலமைச்சருக்கு ஆதரவான செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, முதலமைச்சருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்