நான்காம் ஆண்டு நினைவு நாள்.

0
64

இயக்குனர் மணிவண்ணன்,எனக்கு அண்ணன் மணிவண்ணன் இருபது ஆண்டுகளுக்கு மேலான அறிமுகம் என்றாலும் பதினைந்து ஆண்டுகளாக நெருக்கமான உறவு.
கொள்கை ரீதியான உறவு குடும்பஉறவாக மலர்ந்தது .
சமூகத் தளத்தில் மார்க்சியவாதியாக ,
பெரியாரியவாதியாக, தமிழ்த்தேசியவாதியாக,
கலைப்போராளியாக, தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளராக,மாந்த நேய சிந்தனையாளராக பன்முகப் பரிமாணங்களோடு அவர் இயங்கியது தான் எங்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்தியது.
ஊர் ஊராகப் பயணித்து மக்களைச் சந்தித்து தமிழின, சமூகப் போராட்டக் களத்தில் ஒன்றாக நின்றிருக்கிறோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இக்கட்டான நிலையில் இருந்தபோது பல்வேறு முயற்சிகளில் என்னோடு பங்கெடுத்தவர்.
தமிழ்த் திரையுலகம் பன்முகக் கலைஞனை இழந்து நிற்கிறது!
தமிழ்ச் சமுகம் ஒரு போராளியை இழந்து நிற்கிறது !
நான் என் அண்ணனை இழந்து நிற்கிறேன் . . . . . .
ஓவியர் புகழேந்தி .
(அவர் மறைந்த அன்று எழுதியது)

Oviar Pugazhenthi

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்