வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

0
46

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றும் கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை வெகுவிரைவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபையில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்