ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் வந்த 49 பேரை கடலில் தள்ளி கொன்ற கடத்தல்காரர்கள் – 71 பேர் உயிருடன் மீட்பு

0
54

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா, எத்தியோப்பியோ போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாகவும், வறட்சி காரணமாகவும் ஏராளமான மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள்.

அவர்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு பிழைப்பு தேடி அகதிகளாக செல்கிறார்கள். இவர்கள் முறைப்படி செல்ல முடியாது என்பதால் சட்டவிரோதமாக படகுகளில் ஏறி செல்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு என்றே சில கடத்தல்காரர்கள் படகுகளை இயக்குகிறார்கள். இதேபோல எத்தியோப்பியாவில் இருந்து 120 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஏமன் நாட்டுக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் நடமாட்டம் தெரிந்தது. இதனால் தங்களை கைது செய்துவிடுவார்கள் என்று படகை ஓட்டிவந்த கடத்தல்காரர்கள் பயந்தனர்.

இதில் இருந்து தப்பிக்க படகில் இருந்த அனைவரையும் கடலுக்குள் தள்ளிவிட்டனர். இதில் 49 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாதுகாப்பு படையினர் 71 பேரை மீட்டனர். இவர்கள் அனைவருமே 17 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் கால் பங்கினர் பெண்கள் ஆவர்.

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்