அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதல்ல: சம்பந்தன்

0
36

காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்லவென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை இன்று (புதன்கிழமை) சந்தித்தது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, காணிகளை விடுவித்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளும் மந்த கதியிலேயே செல்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற இச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார்.

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்