‘ நவீன உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் பிரபாகரன்’.

0
112

ஈழத்தின் மூத்த ஆங்கில பத்திரிகையாளரும் ‘Hot spring’ பத்திரிகையின் ஆசிரியருமான சிவநாயகம் அவர்கள் தலைவர் இந்திய இராணுவத்தை வெளியேற்றிய இராஜதந்திர நகர்வை முன்வைத்து ‘ நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் பிரபாகரன்’ என்று ஆசிரியர் தலையங்கம் ஒன்றை அப்போது தீட்டியிருந்தார்.

நான் ‘ ஓயாத அலைகள்’ தாக்குதல் நடவடிக்கையினூடாக புலிகள் ஆனையிறவை கைப்பற்றி கிளாலியினூடாக நகர்ந்து தனங்கிளப்பில் நிலையெடுத்து நின்றபோது ஒரு கட்டுரையை எழுதி விட்டு இந்த தலைப்பின் பொருத்தம் கருதி அவரிடம் அதற்கான அனுமதியை கேட்டேன்.

அவர் கட்டுரையை வாங்கிப் படித்துவிட்டு தனது தலைப்புடன் மேலதிகமாக ‘தெற்காசியா” என்ற பதத்தை இணைத்து ‘தெற்காசியாவின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் பிரபாகரன்’ என்று தலைப்பிட்டு தந்தார்.

அவரது தீர்க்கதரிசனம் போல் அடுத்த வாரம் வெளிவந்த Times சஞ்சிகை தலைவரை ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த 50 பேர்களில் ஒருவராக தெரிவு செய்தததுடன் தெற்காசியாவின் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அவரை குறிப்பிட்டிருந்தது.

தற்போது ‘நந்திக்கடல் கோட்பாடுகள்’ ஐ எழுதி முடித்தாகிவிட்டது.

ஆனால் அவர் உயிருடன் இல்லை.

ஒருவேளை அவர் உயிருடன் இருந்து அவரிடம் முன்னுரை கேட்டிருந்தால் நிச்சயம் பின்வருமாறுதான் தலைப்பிட்டிருப்பார்.

‘ நவீன உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் பிரபாகரன்’.

  • Parani Krishnarajani
SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்