‘பிரபாகரனியம்’ என்றால் என்ன? இது பலரின் கேள்வி. பதில் மிக எளிமையானது – பிரபாகரனைப் போல் – பிரபாகரனியத்தைப் போல்.

0
26

எனது சிந்தனை, உங்களது சிந்தனை மட்டுமல்ல போராடும் ஒவ்வொரு தேசிய இனங்களினதும் கூட்டு சிந்தனையின் வடிவமே ‘பிரபாகரனியம்’.

பெயரின் பின்னால் ஒரு இய(ச)ம் ஒட்டியுள்ளதால் அது தனித்த அவரது கோட்பாடு என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

அது பிரபாகரனியத்திற்கு முரணானது மட்டுமல்ல ‘நந்திக்கடல’; அதை அடியோடு நிராகரிக்கவும் செய்கிறது.

அது லெலினிசம், மார்க்சிசம், மாவோயிசம் ஏன் பெரியாரியத்திற்குக் கூட பொருந்தலாம் ஆனால் பிரபாகரனியத்திற்கு அது பொருந்தாது. அதுவே அதன் சிறப்பு.

மௌனம்தான் பிரபாகரனியத்தின் மொழி. சிந்தனையுடன் கூடிய செயல் வடிவம்தான் அதன் அசைவியக்கம்.

தனது கண்ணசைவிலும் கையசைவிலும் ஒரு இயக்கத்தையும் இனத்தையும் வழி நடத்தியது மட்டுமல்ல ஒரு நடைமுறை அரசையும் கட்டியெழுப்பியவர் பிரபாகரன்.

அவர் நடந்தால் அது ஒரு அரசியல். அமாந்தால் அது வேறு ஒரு அரசியல். அதுதான் அவர் முள்ளிவாய்க்காலில் நின்ற போது அது ஒரு அரசியலாக இருந்தது. அவர் நந்திக்கடலை நோக்கி நடந்தபோது அது வேறு ஒரு அரசியலாகப் பரிணமித்தது.

இந்த இரு நிலங்களுக்கும் இடையிலான அவரது நடையின் பின்னுள்ள அரசியல் பிரளயத்தை கணிக்க சாதாரண மனித அறிவால் முடியாது.

அதுதான் ‘நந்திக்கடல்’ அதைக் கணித்து அந்த வரலாற்று பெருமையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

எனவே பிரபாகரனுக்காக, பிரபாகரனியத்திற்காகக் காத்திருக்காதீர்கள். ஏனென்றால் அது உங்களிடம்தான் இருக்கிறது.

அதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கூட்டாக அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கும்போது நாம் விடுதலையை எமதாக்கிக் கொள்வதாடு ‘பிரபாகரனியம்’ என்பது நம் ஒவ்வொருவரினதும் தனித்துவ கோட்பாட்டுருவாக்கம் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

தனக்கோ தனது குடும்பத்திற்கோ என்று ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்து செல்லாத ஒரு அதி மனிதன் தனது ‘சிந்தனையை’க் கூட நம் ஒவ்வொருவருக்கானதாக மாற்றி வி;ட்டு ‘வெறும்’ மனிதனாக சென்ற வரலாற்றுக் கதை இது.

-பரணி கிருஸ்ணரஜனி

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்