நந்திக்கடல் கோட்பாடுகள்// பிரபாகரனியம்.

0
17

ஒரு போராடும் இனக் குழுமத்தின் தோல்வி மற்றும் அழிவின் விளைவாக உற்பத்தியாகும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியல் குறித்து எச்சரிக்கும் ‘ நந்திக்கடல்’ அதை எதிர்கொள்ளும் பொறிமுறைகளையும் அறிமுகம் செய்வதுடன் ஒரு கட்டத்தில் அந்த அரசியல் இயல்பாகவே மக்கள் – மாணவர் தன்னெழுச்சியினூடாக அழித்தொழிப்புக்குள்ளாகும் என்கிறது.

ஏனென்றால் இந்த அரசியலின் உற்பத்தி அந்த இனக் குழுமத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள், கட்சிகள், அமைப்புக்களிடமிருந்து பிறப்பெடுத்ததேயொழிய இதற்கும் மக்கள் தொகுதிக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது.

ஆனால் இத்தகைய இன அழிப்பு பின்புலத்தில் மக்கள் தொகுதிக்குள்ளிருந்தும் நேர்மறையான அரசியல் உற்பத்தியாகும் என்று கணிக்கிறது ‘நந்திக்கடல்’.
பெரும் பதட்டத்துடனும், அச்சத்துடனும் இதை விபரணம் செய்கிறது ‘நந்திக்கடல்’.

இன அழிப்பு நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு பல்வேறு உளவியல் நிலைகளை கடக்க நேர்வதால் எழும் உணர்வுக் கொந்தளிப்பின் விளைவாக இந்த எமோசனல் அரசியல் பிறப்பெடுக்கும் என்கிறது ‘ நந்திக்கடல்’.

இதன் சமீபத்திய உதாரணம்தான் நல்லூர் கொலைக்கான நமது ‘ வீரவணக்கமும், தத்தெடுப்பும்’.

நமது அரசியல் தலைமைகளிடமிருந்து கிடைக்கும் ‘இணக்க’ அரசியல் பெறுபேறுகளை விட மக்கள் தொகுதிக்குள் இருந்து உற்பத்தியாகும்
இத்தகைய எமோசனல் அரசியலை இன அழிப்பு அரசு மிக வேகமாக அறுவடை செய்யும்.

இதன் ஆபத்து இதுதான்.

எனவே பிரபாகரனியத்தை’ உட் செரித்த ஒரு இனமாக இன அழிப்பு அரசியலை அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் விளங்க முற்படுவோம்.

‘நந்திக்கடல்’ வழிகாட்டுதலுடன் எமது விடுதலைக்கான அரசியலை பகுத்தறிந்து கொள்வோம்.

நந்திக்கடல் கோட்பாடுகள்// பிரபாகரனியம்.

-பரணி கிருஸ்ணரஜனி

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்