இது மாவீரர் காலம்! – செந்தமிழினி பிரபாகரன்

0
256

எழுத முடியாத வார்த்தைகளுக்குள்
அழுகை பொங்கும்
உணர்வுகளுள்
ஈரம் காயாத வீர ஈகங்களின்
தீரம் போற்றும் உயிர்ப்போடு..
மாவீரம்..
தீ மூட்டும் கார்த்திகை காலமிது!

நெஞ்சுக்குள் நேர்கொண்டு
அஞ்சுதல் மிரண்டோட
எஞ்சிய காலமெல்லாம்
தொழுது போற்றி
எழுகை பாடி
மொழி வணங்கும்
தெய்வங்களாக
வழி காட்டும்
வரலாறாக
நித்தமும் நெருப்பேற்றி
பொறுப்பேற்க
நீங்களே
உயிரோரம் தீ மூட்டி
தமிழர்
எம்முள் உருவேற்றுகிறீர்கள்..

காலத்தை வடமிழுக்கும்..
கால சூரியர் தம்மை
கல்லறை வாசலில்
கண்ணீரில் கரைந்து
தொழுதெழும் காலம்…
ஆம்.. இது
கார்த்திகை காலம் 1

நெக்குருகி எழும்
உணர்வுகள்
விழியோரம்
நீரில்
தீபம்
ஏற்றும்
நிமிர்வுக்
காலம்!

இவர்கள் காலமானவர்கள் அல்ல!
காலமாய் …ஆனவர்கள்!

இனி வரும்
சந்ததியும்
மாவீரம்
போற்றும்
மா வீரம்
படைக்கும்!

இது மாவீரர்
காலம்!

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்