அறிவித்தல்கள்

அறிவித்தல்களைப் பிரசுரித்தல்

அறிவித்தல்களைப் பிரசுரிப்பது பற்றிய தகவல்கள்

உங்கள் உறவுகளின் மரண அறிவித்தல், நினைவஞ்சலி, கண்ணீர் அஞ்சலி போன்றவற்றை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளைச் சென்றடைய எமது வெளிச்சவீடு இணையத்தளத்தின் மூலம் இலவசமாகப் பிரசுரிக்கலாம். கீழுள்ள தொடுப்பினூடகச் சென்று உங்கள் அறிவித்தல்களை எங்களுக்கு அனுப்பமுடியும். அதற்கான முழு விபரங்களையும் கீழே தந்துள்ளோம் மேலதிக விபரங்களுக்கு தோடர்புகொள்ளுங்கள்.

அறிவித்தல்களை அனுப்புவதற்கான விண்ணப்பப்படிவம்

அறிவித்தல் தருபவர் வழங்க வேண்டிய தகவல்கள்

 • வழங்குபவரின் முழுப் பெயர்
 • வழங்குபவரின் விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம்
 • காலமானவரின் புகைப்படம் (2MB க்கு மெற்படாத அளவு – PNG, JPG, GIF Format படங்கள் )
 • முழுமையான அறிவித்தல் (சொற்களின் அளவு வரையறையற்றது)

தகவல்கள் அனுப்பும் முறை

பிரசுரிக்கவேண்டிய தகவல்களைத் தயார் செய்தவுடன் மெலுள்ள இணைப்பினூடாகச் சென்று அங்குள்ள படிவத்தில் உங்கள் விபரங்கள் மற்றும் நீங்கள் பிரசுரிக்கவிருக்கும் விபரங்களை நிரப்பி அனுப்பலாம்.

படிவங்களை நிரப்புவதில் சிக்கல்கள் இருக்குமாயின் விபரங்களை velichaveedu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் நாம் உங்களைத் தொடர்புகொண்டு உங்களிடமிருந்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

அறிவித்தல்கள் எப்போது பிரசுரிக்கப்படும் ?

 • உங்கள் தகவல் மற்றும் விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் அதனை நாங்கள் உறுதி செய்தவுடன் அவை இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
 • நீங்கள் எமக்கு வழங்கிய தகவலை உறுதிப்படுத்தத் தாமதம் ஏற்படின் பிரசுரிப்பது கால தாமதமாகலாம்.
 • தொழில்நுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் ஏற்படும் தாமதம் ஏற்படும்.

மேலதிக தகவல்கள்

 • அறிவித்தலானது இணையத்தில் பிரசுரித்த பின்னர் திருத்தங்கள் இருப்பின் தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய முடியும்.
 • நீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய அறிவித்தல்கள் எம்மால் மீளவடிவமைக்கவோ திருத்தம் செய்யவோ இயலாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பும் சந்தர்ப்பத்தில் அதனை மீளவும் பிரசுரிக்கலாம்.
 • இங்கு பிரசுரிக்கப்படும் அறிவித்தல்களுக்குரிய முழுப் பொறுப்பும் உங்களைச் சார்ந்தது. நாம் எந்தவகையிலும் பொறுப்பேடுக்க மாட்டோம்.
 • தகவல் தருபவரின் விபரங்கள் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்ய முடியாது இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
 • குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது அறிவித்தலுடன் இணைக்கப்பட வேண்டும். தொலைபேசி இலக்கம் இணைக்கப்படாத எந்தவொரு அறிவித்தலும் பிரசுரிக்கப்படமாட்டாது.
 • உங்கள் தகவல்கள் தொடர்பில் உங்களை உறுதி செய்ய வேண்டி இருக்கலாம். அதற்கு உங்களது ஆவணங்கள் ஏதாவது கேட்கப் படலாம்.
 • அறிவித்தலில் இணையத்தள இணைப்பு அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை இணைக்க முடியாது.
 • தொழில்நுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் ஏற்படும் தாமதம் ஏற்படும். அதனை மன்னிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டப்படுகிறீர்கள்.
அறிவித்தல்களை அனுப்புவதற்கான விண்ணப்பப்படிவத்தினைப் பெற இத்தொடுப்பினைத் தொடருங்கள்